திருச்சி தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் பிராட்டியூரில் வாக்கு சேகரிப்பு

திருச்சி தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் பிராட்டியூரில் வாக்கு சேகரிப்பு
X

பிராட்டியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார் தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் பிராட்டியூரில் வாக்கு சேகரிப்புபணியில் ஈடுபட்டார்.

திருச்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிகல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். கருமண்டபம், பொன்னகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியை முடித்த ராமதாஸ் இன்று காலை பிராட்டியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

பிராட்டியூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ராமதாஸ் தனக்குஉதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் சாலை, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!