10.58 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள திருச்சி மாவட்ட நகர்ப்புற தேர்தல்

10.58 லட்சம் பேர் வாக்களிக்க உள்ள திருச்சி மாவட்ட நகர்ப்புற தேர்தல்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்).

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் உள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 664 பேர் வாக்களிக்க உள்ளனர்.

அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 415 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 75 ஆயிரத்து 397 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 900 பேரும், திருநங்கைகள் 118 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

இவர்களுக்காக திருச்சி மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 259 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் துறையூர், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகியவை அடங்கும். இந்த 5 நகராட்சிகளிலும் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 775 வாக்காளர்களும், அவர்களுக்காக மொத்தம் 173 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 14 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 474 வாக்காளர்கள் உள்ளனர். 216 வார்டுகளும், இதற்காக 230 வாக்குச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story
ai future project