திருச்சி மாவட்ட 2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்ட 2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

திருச்சி மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1-1- 2022 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 30- 11 -2021 வரை நடைபெற்றது.

அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டார்.

இந்த பட்டியலின் படி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 2,89,579 வாக்காளர்களும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 311 252 வாக்காளர்களும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 271610 வாக்காளர்களும். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 257 165 வாக்காளர்களும். திருவெறும்பூர் தொகுதியில் 2 90 50 75 வாக்காளர்களும், லால்குடி தொகுதியில் 2177 12 வாக்காளர்களும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2 45 386 வாக்காளர்களும், முசிறி தொகுதியில் 231806 வாக்காளர்களும், துறையூர் தொகுதியில் 22 64 51 வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்கள் 23 லட்சத்து 46 ஆயிரத்து 36 பேர் உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் சிவராசு வெளியிட்டார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரீத்தா, தேர்தல் பணி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!