திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட  முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

முன்னாள் படைவீரரின் மனைவி ஒருவருக்கு கலெக்டர் சிவராசு உதவி தொகை வழங்கினார்.

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட ஆட்சியகரத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 155 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் கலந்துகொண்டனர். இவர்களிடமிருந்து சுமார்45 மனுக்கள் பெற்றப்பட்டது. மேலும் திருமண நிதியுதவி 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரமும், கல்வி உதவித்தொகை 9 பயனாளிகளுக்கு ரூ.3,05,000மும், ஈமச்சடங்கு நிதியுதவி 8 பயனாளிகளுக்கு ரூ.74,000மும், மாதாந்திர நிதியுதவி 1 பயனாளிக்கு (வாழ்நாள் முழுவதும்) ரூ.4,000 (பிரதிமாதம்), கண் கண்ணாடி நிதியுதவி 4 பயனாளிகளுக்கு ரூ.18,800மும் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.4,51,800-க்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடா;ந்து முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ஞானசேகரன், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர்.மகாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!