சட்டம் ஒழுங்கு தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை

சட்டம் ஒழுங்கு தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு ,மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பொதுவாக மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது ,ஸ்ரீரங்கம் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுதல், மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் ஆறாவது மதில் சுவர் வடக்கு அடையவளஞ்சான் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business