வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு
X

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை சிறப்பாக செய்து முடித்த ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு தலா இரண்டு பேர் என்ற அளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story