முன்னாள் படைவீரர் கொடி நாள் வசூலை துவக்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்

முன்னாள் படைவீரர் கொடி நாள் வசூலை துவக்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்
X

திருச்சியில் முன்னாள் படைவீரர் கொடிநாள் வசூலை ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

திருச்சியில் நடந்த தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர் கொடி நாள் வசூலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற கொடி நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று முன்னாள் படை வீரர்களின் பெற்றோர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார்.

திருச்சி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் கொடி நாளை முன்னிட்டு முன்னாள் படை வீரர்களுக்கான தேநீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேசுகையில் எந்த ஒரு எதிர்பாராத பேரிடர் நிகழ்வுகள் என்றாலும் படைவீரர்கள் முன்வந்து தங்களது கடின உழைப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் தான் அவர்களது குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் கடினமான வேலைகள் என்றாலும் கூட படைவீரர்களின் குடும்பத்தினர் மட்டுமே தன்னுடைய பிள்ளைகளையும் அதே துறையில் முழு ஈடுபாட்டுடன் ராணுவ பணிக்கு அனுப்புவார்கள். படைவீரர்கள் நமது நாட்டை பாதுகாத்தவர்கள் என்பதால் அவர்களுக்கும் பணிக்காலத்திற்கு பிறகு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ. 25,000 வீதம் ஐந்து பயனாளிகளுக்கும், 10 பயனாளிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.4 லட்சத்து 10,000 ,படைவீரர் போர் பணி ஊக்க மானியத்தின் கீழ் ஒரே மகன் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட மகன் மகள்களை அனுப்பிய ஏழு பெற்றோருக்கு கலெக்டர் பதக்கங்களையும் அணிவித்து பாராட்டினார்.

Tags

Next Story