வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் தணிக்கை

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் தணிக்கை
X

திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தணிக்கை செய்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட இ. வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் தாலுகா அலுவலகம் அல்லது அரசு கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அவை உள்ள அறைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினை தொடர்ந்து திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று வந்தார்.

அந்த கிடங்கில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை கணினி உதவியுடன் ஆய்வு செய்தார். எந்திரங்களின் எண்ணிக்கை தொடர்புடைய ஆவணங்களை தணிக்கை செய்த பின்னர் அந்த அறைக்கு சீல் வைத்து விட்டு சென்றார். அப்போது மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் கே. முத்துசாமி உடனிருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!