திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திருச்சி ஆவின் பால் பண்ணை முன் சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் ஆவின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் பண்ணை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆவின் பால் பண்ணை முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஆவின் பால் பண்ணையில் எம். ஆர். எஸ். ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு தகுதி முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் ,ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ. 575 உடனே வழங்க வேண்டும், ஆவின் ஊழியர்களுக்கு கேண்டீன் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்க பதிவு அறை போன்ற அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும் என கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Tags

Next Story