திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் வே. நடராஜா தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் க. சுரேஷ் துணைத் தலைவர் செல்வகுமார் துணைச்செயலாளர்கள் வங்கி ராமராஜ், போக்குவரத்து சுப்பிரமணி இணைப்பு சங்க நிர்வாகிகள் சிவா, அபுதாஹிர் ,நேரு துரை, கார்த்திகேயன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. 15 வது மாநில மாநாடு செப்டம்பர் 2 ,3 ,4 தேதிகளில் திருச்சியில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்குவது, மற்றும் தமிழக அரசு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 21,000 சட்டத்தை அமுலாக்க வேண்டும் மற்றும் ஒன்றிய அரசு கொண்டு வந்த 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பாக மாற்றியதை ரத்து செய்யகோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றக் கோரியும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களில் 60 வயதை கடந்தவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 6000 வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் 13ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினை திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story