திருச்சி மாநகராட்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருச்சி மாநகராட்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
X

திருச்சி  மாநகர் மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடந்தது.

திருச்சி மாநகராட்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது மாநாடு நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மேற்குப்பகுதி 4வது மாநாடு இன்று தென்னூர் அண்ணா நகர் கவிமணி தெரு அரங்கத்தில் நடந்தது. கட்சியின் மூத்த நிர்வாகி தியாகராஜன் கட்சி கொடியேற்றினார்.


கே. முருகன் வரவேற்புரையாற்றினார். மாநில நிர்வாக குழு முன்னாள் உறுப்பினர் எம். செல்வராஜ் அரசியல் விளக்க உரையாற்றினார். அமைப்பு நிலை மற்றும் கட்சியின் முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் திராவிடமணி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர்க. சுரேஷ் சிறப்புரையாற்றினர்.

பகுதி செயலாளர் பாலமுரளி அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ரவீந்திரன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். பிரதிநிதிகளின் விவாதத்திற்குப் பிறகு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.புதிய பகுதி குழு 21 பேர் கொண்ட அமைப்பாக தேர்வு செய்யப்பட்டது.

மேற்கு பகுதி செயலாளராக சுரேஷ், முத்துசாமி துணை செயலாளர்களாக க. இப்ராஹிம், கே.முருகன் பொருளாளராக பா. ரவீந்திரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மாதர் சம்மேளனம் புஷ்பம், ஆயிஷா மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாட்ஷா, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக சரண்சிங் நன்றி கூறினார்.

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது தலைமை மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை, நோயாளிகளின் படுக்கைகள் பற்றாக்குறை, மற்றும் சுகாதார சீர்கேடு, அசுத்தமான கழிவறைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உள்ள குறைகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தென்னூர் அண்ணா நகர் 2 கிராஸ் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு இடத்தில் மாநகராட்சி சார்பில் சிலம்பம், வில்வித்தை பேன்ற விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக இந்த இடத்தை அமைக்க வேண்டும்,

திருச்சி உறையூர் மற்றும் தில்லை நகர் பகுதிகளில் பல தனியார் உயர்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி கூட இல்லாததால் ஏழை எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி தொடர முடியாத நிலை உள்ளது. எனவே உறையூர் பகுதியில் சரியான இடத்தை தேர்வுச் செய்து அரசு மேல்நிலைப் பள்ளியை அமைத்துத் தரவேண்டும்

திருச்சி மாநகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து கல்வி நிலையங்களிலும் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் மற்றும் குடிநீர் ஹீட்டர் இயந்திரம் அமைக்க வேண்டும் என்றும், மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தி தினமும் பள்ளி வளாகம் முதல் கழிவறை வரை பள்ளியின் அனைத்து பகுதியையும் தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தூர் நால் ரோட்டில் உள்ள மதுபான கடைக்கு அருகில் பேருந்து நிறுத்தம் மற்றும் கல்லூரி, பள்ளி மற்றும் அதிகம் மக்கள் கூடும் இடமாக மதுபானக்கடை அமைந்துள்ள பகுதி இருப்பதால், புத்தூர் நால் ரோட்டில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும்

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்பதிய பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவாக முடித்து விரைவில் புதிய சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி தரமான சாலைகள் அமைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!