திருச்சி மாநகராட்சி: பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன்.
பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகும்.
குழந்தை பள்ளியில் சேர வாக்காளர் அடையாள அட்டை பெற ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட் விசா உரிமம் அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவில் ஆன உறுதிமொழியை சம்பந்தப்பட்ட திறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணம் இன்றி பெயர் பதிவு செய்திடலாம் 12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ. 200 தாமத கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்து விடலாம்.
15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி 1/1/2020 க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 1/1/2020 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31/12/2024 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ,பேரூராட்சி அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம், இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu