திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு
X
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் (பைல் படம்)
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார்கள்.

திருச்சி மாநகராட்சியில் 65 மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 65 மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 389 பேர் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்ற 65 பேரின் பெயர்கள் கட்சி வாரியாக அறிவிக்கப்பட்டன.

இந்த 65 புதிய மாமன்ற உறுப்பினர்களும் நாளை காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஏ. எஸ். ஜி. லூர்து சாமிப்பிள்ளை கூட்ட மண்டபத்தில் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து வருகிற 4ம் தேதி காலை மேயர் பதவி தேர்தலும் அதனைத் தொடர்ந்து மாலையில் துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்