திருச்சி மாநகராட்சி 5 மண்டல குழு தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியது

திருச்சி மாநகராட்சி 5 மண்டல குழு தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியது
X

மண்டல குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுடன் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல குழு தலைவர் பதவியையும் தி.மு.க. கைப்பற்றியது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 65. ஐந்து மண்டல குழுக்கள் உள்ளன. இந்த ஐந்து மண்டலங்களிலும் குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.

இந்த தேர்தலில் 1வது மண்டல குழுவிற்கு 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆண்டாள் ராம்குமாரும், மண்டலம் இரண்டிற்கு 32 வது வார்டில் வெற்றி பெற்ற ஜெய நிர்மலாவும், மண்டலம் மூன்றிற்கு 16வது வார்டு உறுப்பினர் மதிவாணன், நான்காவது மண்டல குழு தலைவர் பதவிக்கு 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் துர்கா தேவியும், ஐந்தாவது மண்டல குழு தலைவர் பதவிக்கு 22வது வார்டு மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணனும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவருமே தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

வேறு யாரும் இவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவில்லை. ஆதலால் இவர்கள் 5 பேரும் போட்டியின்றி ஒருமனதாக மண்டல குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்தார்.உடனடியாக அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையுமா வழங்கினார். பின்னர் அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் மண்டல குழு தலைவர்களாக பதவி ஏற்றனர். அதன் பின்னர் மேயர் அன்பழகன் துணை மேயர் திவ்யா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!