திருச்சி மாவட்டத்தில் இன்று 63 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 63 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 645 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கொரோனாவுக்கு திருச்சி மாவட்டத்தில் உயிர்பலி எதுவும் நடைபெறவில்லை. நேற்றும் உயிர்பலி எதுவும் இல்லை. தொடர்ந்து கொரோனா ஒழிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், தடுப்பூசி செலுத்தி கொண்டும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படி மாவட்ட கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!