/* */

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மருத்துவமனை,நூலகத்தை ஆய்வு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆயுதப்படை மருத்துவமனை, நூலகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மருத்துவமனை,நூலகத்தை ஆய்வு
X

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நூலகத்தில் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர்  கார்த்திகேயன் தன்னை நூலக உறுப்பினராக பதிவு  செய்து கொண்டார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் இன்று காலை திருச்சி மாநகரம், கே.கே.நகரில் உள்ள காவலர் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், டாக் ஸ்குவாடு, நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், டாக் ஸ்குவாடில் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் நாய்களை சிறப்பாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் போலீஸ் வாகனங்கள் குறித்த பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும். பெட்ரோல் பங்கின் உரிமத்தினை உரிய காலத்தில் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும். தீப்பற்றாத வண்ணம் எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருக்க வேண்டும். உரிய தீ தடுப்பு உபகரணங்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

திருச்சி மாநகர ஆயுதப்படையில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை காவலர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்தபோது, அனைவரிடமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சந்தாதாரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு, தன்னையும் ஒரு சந்தாதாரராக பதிவு செய்து கொண்டார்.

Updated On: 12 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!