விவசாயிக்கு,வங்கி ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட் உத்தரவு

விவசாயிக்கு,வங்கி ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட் உத்தரவு
X

திருச்சி கோர்ட் (கோப்பு படம்).

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் செங்காளக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது50 ) விவசாயியான இவர் திருச்சி அருகே உள்ள ஆவூர் கிராமத்தில் தனது விவசாய தோட்டத்தில் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் பட்டுப்புழு வளர்த்து அதன் மூலம் பிழைக்கலாம் என கருதிய சின்னத்துரை அதற்காக ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி மையத்தில் பட்டு தொழிலுக்கான பயிற்சி பெற்று வந்தார்.

பட்டுப்புழு

பட்டுப்பூச்சி வளர்ப்பதற்காக தனது தோட்டத்தில் மல்பரி செடிகளையும் வளர்த்து 20 அடி அகலம் 50 அடி நீளத்தில் கொட்டகை அமைத்தார். மேலும் பட்டுப்புழு வளர்ப்பிற்கான கொட்டகை மற்றும் இதர கட்டமைப்புகளை முழுமையாக அமைப்பதற்காக ரூ.1 லட்சம் தேவைப்பட்டதால் பட்டுவளர்ச்சி துறை அதிகாரிகளை அணுகினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் சின்னதுரையின் நிலத்தை பார்வையிட்டு தாங்கள் கொட்டகை அமைத்து பட்டுப்பூச்சி வளர்த்தால் வங்கியில் மூன்று லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு தங்களுக்கு பட்டு வளர்ச்சி துறை சார்பில் ரூ. 87 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் நிலத்தை ஆய்வு செய்த பின்னர் சூரியூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்தனர்.

பட்டு தொழிலுக்கான கொட்டகை

இதன் அடிப்படையில் நான் சூரியூரில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளை மேலாளரை அணுகி தேவையான ஆவணங்கள் எல்லாம் அளித்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் ஒதுக்கீடு செய்து எனது சேமிப்பு கணக்கில் வங்கி நிர்வாகம் வரவு வைத்தது.

அந்த பணத்தில் ரூ. 16 ஆயிரத்து 500 ரூபாயை நான் முதற்கட்டமாக எடுத்து எடுத்தேன். நான் பணம் எடுத்த அதே நாள் எனது சேமிப்பு கணக்கை வங்கி அதிகாரிகள் முடக்கி விட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர்கள் இப்படி செய்தது எனக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக நான் திட்டமிட்டபடி பட்டு வளர்ப்பு தொழிலுக்கான கொட்டகை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை முழுமையாக செய்ய முடியாமல் போனது. அது மட்டுமல்லாமல் பட்டு வளர்ச்சி நிறுவனம் எனக்கு தருவதாக கூறியிருந்த ரூ. 87 ஆயிரம் மானியமும் கிடைக்காமல் போய்விட்டது.

இது பற்றி நான் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது நீங்கள் வேறு வங்கியில் கடன் வாங்கி அந்த தொகை நிலுவையில் உள்ளது. ஆதலால் அதை கட்டி முடிக்கும் வரை இந்த தொகையை நீங்கள் பயன்படுத்த முடியாது என கூறிவிட்டனர். மேலும் 2017 ஆம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எனது சேமிப்பு கணக்கிலிருந்து மேலும் ரூ. 71 ஆயிரம் கடன் தொகையை எடுத்து விட்டார்கள். இதனால் வங்கி நிர்வாகம் எனக்கு ஒதுக்கிய கடன் தொகையை நான் முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

மல்பரி செடி தோட்டம்

வங்கி அதிகாரிகளின் இந்த செயல் சேவை குறைபாடு மற்றும் சட்ட விரோதமானது ஆகும். வங்கி அதிகாரிகளின் இந்த செயலால் நான் பட்டுப்பூச்சி வளர்ப்பிற்காக சாகுபடி செய்திருந்த மல்பரி செடிகளும் வீணாகி போனது. நான் அமைத்திருந்த கொட்டகை மற்றும் கட்டமைப்புகளும் பயன்பாடற்று போனது. மேலும் என்ன நோக்கத்திற்காக வங்கியில் நான் கடன் வாங்கினேனோ அதுவும் நிறைவேறாமல் போய்விட்டது.

வங்கி நிர்வாகத்தின் இந்த செயலால் நான் இன்று வரை சுமார் 5 லட்சம் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளேன். ஆதலால் எனது மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்பையும் ஈடுகட்டும் வகையில் வங்கி நிர்வாகம் எனக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் வழக்கு செலவுக்கு எனக்கு பணம் வழங்க உத்தரவிட வேண்டும் என திருச்சி நுகர்வோர் கோர்ட்டில் சின்னதுரை தனது வழக்கறிஞர் தமிழ்மணி மூலம் வழக்கு தொடர்ந்தார்.

விதையுடன் கூடிய மல்பரி செடி

இந்த வழக்கை திருச்சி நுகர்வோர் கோர்ட் நீதிபதி ஆர். காந்தி மற்றும் உறுப்பினர்கள் செந்தில்குமார், சாயீஸ்வரி ஆகியோர் விசாரித்து கரூர் வைஸ்யா வங்கி பாதிக்கப்பட்ட விவசாயி சின்னதுரைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகையும், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும். இந்த தொகைகளை இரண்டு மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....