தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு
X

திருச்சி உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

திருச்சி வயலூர் சாலை உய்ய கொண்டான் ஆறு அருகில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.அப்போது ஆற்றில் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!