தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகளை மூட திருச்சி கலெக்டர் உத்தரவு
2022 ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 09.07.2022 அன்று நடைபெறுவதையொட்டி ஜூலை 07 முற்பகல் 10.00 மணி முதல் ஜூலை 09 இரவு 12.00 மணி வரையிலும், திருச்சி மாவட்டத்திலுள்ள சொரத்தூர் முத்தையம்பாளையம், சாந்தமங்கலம், இலால்குடி, மணக்கால், புத்தாநத்தம் கருமலை, தீராம்பாளையம், திருப்பைஞ்ஞீலி, பூனாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், ஜூலை 12 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் துறையூர், இலால்குடி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பகுதிகளில் 5 கி.மீ சுற்றளவிற்குள் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் எப்எல்2 முதல் குடு11 (எப்எல்-6 தவிர) வரையிலான உரிமதலத்தில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மேற்கண்ட தினங்களில் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu