புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவு
X

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
காவிரியில் இருந்து பிரியும் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்று புதிய கட்டளை மேட்டு வாய்க்கால். காவிரியில் குளித்தலை அருகே பிரிந்து தாயனூர், திருச்சி நகரம், குண்டூர் வழியாக பூதலூர் வரை செல்லும் இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கும்பக்குடி என்ற இடத்தில் சுமார்5 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டது.இந்த உடைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!