திருச்சி மாநகர போலீசாருக்கு குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி மாநகர போலீசாருக்கு குறைதீர்க்கும் கூட்டம்
X

திருச்சி மாநகர போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் போலீசாருக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகர போலீசாருக்கு குறைதீர் கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற பெயரில் திருச்சி மாநகர போலீசாருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநகர காவல் துறையில் பணிபுரியும் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பணி இடமாற்றம், பணிஉயர்வு, சம்பளப் பிடித்தம், பணியில் உள்ள பிரச்சினைகள், அவரகளின் குறைகள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை ஆணையர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!