குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை

குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை
X

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி.

திருச்சியில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
  • திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.
  • மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் சட்டம் ஒழுங்கை பேணி காக்கவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது.
  • திருச்சி மாநகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் மேலும் பழுதான சிசிடிவி கேமராக்களை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் திருச்சி மாநகரில் உள்ள 50 காவல் பூத்துகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் எந்த நேரத்திலும் சோதனை செய்யப்படும் எனவும் மேலும் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள திருட்டு வழக்குகளை துரிதமாக புலன் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும், முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குனர் அலுவலக புகார் மனுக்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது செய்து வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் காமினி அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture