திருச்சி மாநகராட்சி தேர்தல் களத்தில் நிற்கும் 589 வேட்பாளர்கள் யார், யார்?

திருச்சி மாநகராட்சி தேர்தல் களத்தில் நிற்கும் 589 வேட்பாளர்கள் யார், யார்?
X
திருச்சி மாநகராட்சி தேர்தல் களத்தில் நிற்கும் 589 வேட்பாளர்கள் யார், யார் என்ற பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 65. நடைபெற உள்ள தேர்தலில் வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை, வாபஸ் முடிந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 718 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் பரிசீலனையின்போது 15 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 114 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை இன்று வாபஸ் பெற்றனர். எனவே திருச்சி மாநகராட்சி தேர்தலில் இறுதியாக 589 பேர் 65 பதவியிடங்களுக்கு போட்டியிடுகிறார்கள்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!