திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மரணம்

திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மரணம்
X
திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவர் அத்தர் பெருமாள் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

திருச்சி மாநகரில் உள்ள நகர கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த பத்மநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது துணை தலைவராக இருந்த அத்தர் பெருமாளுக்கு திருச்சி நகர கூட்டுறவு வங்கி தலைவராக பதவி கிடைத்தது.

மேலும் அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர மகளிர் அணியின் இணை செயலாளராகவும், முன்னாள் செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று 15-2-2022-ந்தேதி மாலை மாரடைப்பு காரணமாக அத்தர் பெருமாள் உயிரிழந்தார். அத்தர் பெருமாள் அ.தி.மு.க. நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்