திருச்சி சோழன் பாறையில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்து கல்வெட்டு

திருச்சி சோழன் பாறையில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்து கல்வெட்டு
X

திருச்சி சோழன் பாறையில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு.

திருச்சி சோழன் பாறையில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்து கல்வெட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து வரலாற்றை தேடி ஒரு அடி நிகழ்வினை திருச்சி உறையூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள் மேற்கொண்டனர். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் வரலாற்று மாணவர் அரிஸ்டோ உள்ளிட்டோர் திருச்சி உறையூர் சோழன்பாறை கல்வெட்டு பகுதிக்கு சென்றனர்.

சோழன் பாறை மலைக்குன்றில் குழுவினர் ஆய்வு செய்து பேசுகையில், சங்ககால சோழர்களின் தலைநகர் உறையூர் ஆகும். பிற்கால சோழர்காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது. திருச்சி உறையூர் நகரின் வெளிப்பகுதியில் சோழ நல்லூர் கட்டளை கால்வாய் வட துருவத்தில் அமைந்துள்ளது ஓர் சிறிய மலைக்குன்று. மலைக்குன்றில் கிழக்கில் இருந்து மேற்கு திசை நோக்கி ஒன்பது படிக்கட்டுகள் மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ளன.ஒன்பதாவது படியேறியவுடன் மலைக்குன்றில் நீள் செவ்வக வடிவில் குடையப்பட்ட மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்றுள்ளது. கல்வெட்டு கிழக்கு திசை நோக்கி மலை குன்றில் உள்ளது. தற்போது இக்கல்வெட்டு மிகவும் சிதைந்த வண்ணம் படிக்கமுடியா வண்ணம் உள்ளது. இக்கல்வெட்டு 1890ல் படியெடுக்கப்பட்டுள்ளது.இந்த 120 வருட இடைவெளியில் முழுவதும் சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு தென்னிந்திய தொகுதி 4 ல் வெளிவந்துள்ளது.


இவ்வூரிலுள்ள ஜெயங்கொண்ட சோழநல்லூர் எனும் கட்டளை வாய்க்கால், பாடிகாவல் காக்கும் தலைவர்களில் ஒருவன் வெட்டியதாய் தெரிகிறது. இன்று இக்கட்டளை வாய்க்காலும், கல்வெட்டும் உருக்குலைந்துபோய் உள்ளது. நிலம் தானமாக கொடுக்கப்பட்டதற்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டு என கூறுகின்றனர். மலைக்குன்றின் மீது தற்போது வடக்கு திசை நோக்கி ஸ்ரீ முக்தி விநாயகர், ஸ்ரீ சோழன் பாறை தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது. கோவில் எதிரே இரும்பு வேல் அமைக்கப்பட்டு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளது. குன்றின் மேல் வேம்பு, ஆலம் மரமும் உள்ளது. தற்போது மலைக்குன்று கீழே வடகிழக்கு மூலையில் சூலாயுதம் வைத்து விளக்கேற்றி பொதுமக்கள் வழிபட்டு வருகிறார்கள். இளைஞர்கள் பொழுது போக்குவதற்கு மலைக்குன்றை பயன்படுத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!