திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி.ஜி.பி.சுனில் குமார் சிங் ஆய்வு

திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி.ஜி.பி.சுனில் குமார் சிங் ஆய்வு
X
திருச்சி மத்திய சிறை (பைல் படம்)
திருச்சி மத்திய சிறையில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் சிங் ஆய்வு நடத்தினார்.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைச் சாலைகளில் அடைக்கப் பட்டுள்ள 700 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்து இருந்தது.

மேலும், கைதிகளை விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விடு தலையாகும் கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய சிறையில் சிறைத்துறை டி.ஜி.பி. சுனில் குமார்சிங் ஆய்வு செய்தார். அப்போது அவரை சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் வரவேற்றார். சிறைக்காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட டி.ஜி.பி. சுனில்குமார்சிங் சிறைக்குள் சென்று ஐ.டி.ஐ.யை பார்வையிட்டார். மேலும் புதிதாக சிறைக்கு வந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்து விட்டு, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!