திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ரூ.1 கோடியில் சாலையை சீரமைக்க முடிவு

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ரூ.1 கோடியில் சாலையை சீரமைக்க முடிவு
X

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மோசமான நிலையில் உள்ள சாலை.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி பொது நிதி ரூ.1 கோடியில் சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி பொதுநிதியைப் பயன்படுத்தி ரூ.1 கோடியில் சாலைகளை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் திருச்சி மாநகரின் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளும் மழைக்கு தப்பவில்லை. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள சாலைகளோ மிக மோசமான நிலையில் உள்ளது. மத்திய பஸ்நிலைய சாலைகளில் பெரிய பள்ளங்கள் இருப்பதால் பயணிகளுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. மழையினால் சாலையின் மேற்பரப்பு மிகவும் அரிக்கப்பட்டு, பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே பல்லாயிரம் மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து மாநகராட்சி பொது நிதியில் சாலைகளை சீரமைக்க, 1.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொருத்தமான ஒப்பந்ததாரரை அடையாளம் காண டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் பேட்ச் அப் ஒர்க் செய்வதற்கு பதிலாக, பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளுடன் பஸ் நிலையத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மறுசீரமைக்கப்படும். ஒரு மாதத்திற்குள் பணிகள் துவங்கி, சில வாரங்களில் நிறைவடையும் என்றார்கள்.

சாலையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு, பஸ் நிலையத்திற்குள் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பருவமழை துவங்கியதால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Tags

Next Story
நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!