திருச்சி காவிரி பாலம் 10-ம்தேதி நள்ளிரவு முதல் பராமரிப்பு பணிக்காக மூடல்

திருச்சி காவிரி பாலம் 10-ம்தேதி நள்ளிரவு முதல் பராமரிப்பு பணிக்காக மூடல்
X

திருச்சி காவிரி பாலம் (பைல் படம்).

திருச்சி காவிரி பாலம் 10-ம்தேதி நள்ளிரவு முதல் பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை அடுத்து செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளதா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனையொட்டி அவ்வழியே நடைபெறும் போக்குவரத்தில் 5 மாத காலத்துக்கு தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலையில்) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை புறவழிச்சாலை (சென்னை – திருச்சி – திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடது புறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி வடகரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்காவலை அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து வருபவர்கள் இடதுபுறம் உள்ள திருவானைக்காவல் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்காவல் வந்தடைந்து வலது புறம் திரும்பி டிரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை பழைய பாலத்தின் வழியாக வலது புறம் திரும்பி ஓயாமரி வழியாக அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லலாம்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தை தவிர்த்து புறவழிச் சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புது பாலம் வழியாக நம்பர் ஒன் டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம்.அவ்வாறே சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் நம்பர் ஒன் டோல்கேட் அடைந்து காவிரி புதுபாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம். சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அண்ணாசாலை வழியாக காவிரி பாலத்துக்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ஓயாமரி வழியாக சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நம்பர் ஒன் டோல்கேட் சென்று செல்லலாம். காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி மேற்கண்ட மாற்று பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!