திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.கணேசன் ஆய்வு

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.கணேசன் ஆய்வு
X

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஐ.ஜி. கணேசன் ஆய்வு நடத்தினார்.

சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.கணேசன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் கையாள்வது, கோப்புகளை சிறந்த முறையில் பராமரிப்பது, விரைவாக விசாரணை நடத்தி முடிப்பது ஆகியவற்றில் சிறந்த முறையில் செயல்பட்ட 3 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனின் தகுதி குறித்து தமிழக காவல்துறை தலைமை அலுவலக ஐ.ஜி. கணேசன் இன்று ஆய்வு செய்தார்.

Next Story