திருச்சி: ஊரக உள்ளாட்சி காலி பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

திருச்சி: ஊரக உள்ளாட்சி காலி பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
X
பைல் படம்.
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலி பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 வரை காலியாகவுள்ள துறையூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு எண்.12), மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பளுவஞ்சி கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சாத்தமங்கலம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய 2 ஊராட்சி மன்ற தலைவர் பதவி இடங்கள், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்(வார்டு எண்.5), இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.1), மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் (வார்டு எண்.5) மற்றும் புத்தாநத்தம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.5), மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீராம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்(வார்டு எண்.2,3,5,6 மற்றும் 8), புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்க்குளம் கிராம ஊராட்சி வார;டு உறுப்பினர்(வார்டு எண்.7), தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிட்டிலரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பின (வார;டு எண்.9), திருவெறும்பு+h; ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்(வார்டு எண்.3), தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிடாரமங்கலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்(வார்டு எண்.3), துறையூர்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்(வார்டு எண்.4) ஆகிய பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் நடத்திடும் பொருட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கை பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது. 1. வேட்பு மனு தொடங்கும் நாள் 20.06.2022 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

2. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27.06.2022

3. வேட்பு மனுக்கள் பரிசீலனை நாள் 28.06.2022 காலை 10.00 மணிக்கு

4. வேட்பு மனு திரும்ப பெறும் நாள் 30.06.2022 மாலை 3.00 மணி வரை

5. தேர்தல் நடைபெறும் நாள் 09.07.2022 காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

6. வாக்கு எண்ணிக்கை நாள் 12.07.2022 காலை 8.00 மணி முதல்

7. தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும் நாள் 14.07.2022

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்