பல்கலைக்கழக அளவிலான போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்

பல்கலைக்கழக அளவிலான போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்
X

சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினருடன் முதல்வர் உள்ளார்.

பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி புதுகை, சிவபுரம், ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வாலிபால் போட்டி திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலும் நடைபெற்றது.

டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, குடந்தை இதயா மகளிர் கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று முதல் இடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி, திருச்சி காவேரி மகளிர் கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியை என்ற 25-15, 25-10 புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவியர்களுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் குடந்தை அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடந்தை அரசு மகளிர் கல்லூரியை 25–15, 25–17, என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

டேபிள் டென்னிஸ் போட்டி மற்றும் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களை கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!