திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் தங்கம் கடத்தி வந்த இருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் தங்கம் கடத்தி வந்த இருவர் கைது
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் மதிப்புள்ள 1,579 கிராம் தங்கம் பறிமுதல் இருவர் கைது.

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன், அரியலூரை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் ஆகியோர் தங்கள் உடலில் 1,579 கிராம் எடை கொண்ட ரூ.76.80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!