திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஒரு  கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் (கோப்பு காட்சி)

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்படார்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன், வான் நுண்ணறிவுசுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணிஒருவரின் உடமைகளை சோதனையிட்ட போது தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தங்கம் கடத்தியவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

இவரிடமிருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.44 லட்சமாகும்.

Tags

Next Story
ai in future agriculture