திருச்சி விமான நிலையத்தில் தங்க வேட்டை: தீபாவளி நாளில் இரண்டு பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்க வேட்டை: தீபாவளி நாளில் இரண்டு பேர் கைது
X

திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்)

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்க வேட்டை நடத்திய சுங்க அதிகாரிகள் தீபாவளி நாளில் இரண்டு பேரை கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் தீபாவளி தினத்தன்று நடத்தப்பட்ட கடத்தல் வேட்டையில் சுமார் ஒன்றே முக்கால் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது இரண்டு பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தீபாவளியன்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் மலக்குடலில் 995 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதன் மதிப்பு 60 லட்சத்து 42 ஆயிரம் ஆகும்.

இதே போல நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஒரு பயணி 7 தங்க பிஸ்கட்களை பேண்ட் பாக்கெட்டில் வைத்து மறைத்து கொண்டு வந்ததும், 94 கிராம் நகைகளை கூடுதலாக கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது .அது 794 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதனையொட்டி அவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தீபாவளி தினத்தன்று திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 789 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த தங்க வேட்டையில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் தங்கம் பிடிபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story