திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு
X

வீடு வீடாக வாக்கு சேகரித்தார் திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி..மு..க.. வேட்பாளர் வெ.. ராமதாஸ்.

திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சி 55 வது வார்டு தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிகல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம், பொன்னகர் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களிடம் நீங்கள் என்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் சாலை, தெருவிளக்கு,குடிநீர், மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!