திருச்சி 55-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு மனு தாக்கல்

திருச்சி 55-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு மனு தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.ஜோசப் ஜெரால்டு தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி செல்வபாலாஜியிடம் தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 55 வது வார்டு அ.தி.மு‌க. வேட்பாளராக ஏ. ஜோசப் ஜெரால்டு கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டார். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளராக இருக்கும் ஜோசப் ஜெரால்டு தனது வேட்பு மனுவை மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி செல்வ பாலாஜியிடம் தாக்கல் செய்தார்.

ஜோசப் ஜெரால்டு ஏற்கனவே 3 முறை தொடர்ச்சியாக இதே வார்டில் மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனு தாக்கல் முடிந்ததும் தனது வார்டு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஜோசப் ஜெரால்டு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்