திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு
X

தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ்.

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் தொண்டர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கினார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக டி. புஷ்பராஜ் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் புஷ்பராஜ் இன்று திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த கள்ளர் தெரு, நாயக்கர் தெரு, புது தெரு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வாக்கு சேகரித்தார்.

வீடு வீடாக சென்று வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்த புஷ்பராஜ் தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பணியாற்றுவேன் என மக்களிடம் வாக்குறுதி அளித்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளருடன் பகுதி தி.மு.க. செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர் மூவேந்திரன் உள்பட நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!