திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X
திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

பனாரஸில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருச்சி வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அந்த ரயிலில் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இரண்டு சாக்கு மூட்டை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதனை பிரித்து பார்த்தபோது அதில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதை யாரோ கடத்தி வந்துள்ளனர். இதனை போலீசார் சோதனை செய்வதை பார்த்து இதனை கடத்தி வந்தவர்கள் அங்கிருந்து நைசாக தப்பியுள்ளனர். அதனால் அந்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 55 ஆயிரத்து 800 ஆகும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்