திருச்சி 11 -வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வனிதா பிரச்சாரம் துவக்கம்

திருச்சி 11 -வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வனிதா பிரச்சாரம் துவக்கம்
X
திருச்சி பெண் பிரமுகர் ஒருவரிடம் ஆதரவு திரட்டினார் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். வனிதா.
திருச்சி மாநகராட்சி 11 -வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் வனிதா தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் போட்டியிடக்கூடிய அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது‌. வேட்பாளர்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது பிரச்சாரப் பணியை தொடங்கி விட்டனர்.

திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக ஆர். வனிதா போட்டியிடுகிறார். இவர் இதே வார்டில் (பழைய எண் 57) ஏற்கனவே இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் வனிதா வழக்கறிஞர் ஆவார். வாக்காளர் பட்டியலில் தனது பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலையில் இருந்தே வனிதா தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கி விட்டார்.

இன்று காலை முதல் கட்டமாக உறையூர் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் வார்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க முழு அளவில் பாடுபடுவேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்