பத்மஸ்ரீ விருதாளர்கள் மூவருக்கு திருச்சியில் பாராட்டு விழா
திருச்சி கலைக்காவிரியில் பத்மஸ்ரீ விருதாளர்கள் மூவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது பட்டியலில் திருச்சியைச் சேர்ந்த 3 பேர் இடம் பெற்று உள்ளனர்.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள திருச்சியை சேர்ந்த பிரபல கிளாரிநெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், சதிர் ஆட்டம் நடன கலைஞர் முத்து கண்ணம்மாள் மற்றும் ஆயிரம் கழிப்பறைகளை பாமர மக்களுக்கு கட்டிக்கொடுத்த திருச்சி கிராமாலயா அமைப்பின் நிறுவனர் தாமோதரன் ஆகியோருக்கு பாராட்டு விழா திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
விஷன் இந்தியா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் ராபின் பேட்ரிக் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலைக் காவேரி கல்லூரி இயக்குனர் அருட்தந்தை சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் நரேந்திர ஜனா ,திருச்சி பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் செந்தில் குமார் நல்லுசாமி, ஹீடு இந்தியா அறக்கட்டளை தலைவர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள 3 பேருக்கும் பாரதி புரஸ்கார் விருதினை மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை விஷன் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் ராபின் பேட்ரிக் செய்து இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu