திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க பயிற்சி

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க பயிற்சி
X

பயிற்சி முடித்த திருநங்கை ஒருவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளை தொழில் முனைவோராக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி நாவலுர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் இன்று (28.6.22) நடைபெற்ற நிகழ்ச்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் திருநங்கைகளை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட உணவு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் வழங்கி, திருநங்கைகள் உணவகம் தொடங்கி நடத்துவதற்கான ஏற்பாட்டினை செய்து வழங்கினார்.

இந்நிகழ்வில் நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் என்.எம். மோகன் கார்த்திக், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சி வன்னியராஜன், தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் முனைவர்.பி. பரமகுரு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.செந்தில்குமார், தலைமை செயல் அலுவலர்எஸ். சந்தோஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!