திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சியில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றி வந்த 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக அருள் ஜோதி, எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பேபி உமா, எடமலைப்பட்டி புதூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன், செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக ஷியாமளா தேவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன், கோட்டை போலீஸ் சட்டம்-ஒழுங்கு சப்- இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!