'இளைஞர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற பயிற்சி வகுப்பு' -ஜெரால்டு வாக்குறுதி
திருச்சி மாநகராட்சி ௫௫வது வார்டு அதிமுக வேட்பாளராக மாநகர் மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக உள்ள ஏஜோசப் ஜெரால்டு போட்டியிடுகிறார். இதே வார்டில் ஏற்கனவே 3 முறை மாமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய ஜெரால்டு தான் ஆற்றிய மக்கள் பணிகளை எடுத்துக்கூறி வார்டு முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார்.
அத்துடன் அவர் வார்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளில் சில இதோ...
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் முதன்மை வார்டாக 55ஆவது வார்டை மாற்றி காட்டுவேன்.
படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு தனியார் தொழிலகங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன்.
நமது வார்டுக்கு என்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்வேன்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக எளிதாக கல்வி கடன் பெற்று தர ஏற்பாடு செய்வேன்.
ஏழை எளிய மாணவர்கள் சிறந்த கல்வியோடு அதிக மதிப்பெண்களை தேர்வு பற்றிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும். சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும்.
வார்டில் மாநகராட்சி உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்படும். வார்டு மக்களின் குறைகளை எனது வாட்ஸ் அப்பிற்கு தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மது வார்டில் நடைபெறும் பாதாள சாக்கடை இணைப்பு நமது வீட்டிற்கு நேர்த்தியாகவும் பின்நாட்களில் எந்த பிரச்சனையும் வராமல் குறைந்த செலவில் அமையவும் உறுதுணையாக இருப்பேன்.
தூய்மை பணிகள் மேம்படுத்தப்பட்டு குப்பைகள் இல்லாத தெருக்களாக மாற்றி நமது வார்டு பொது சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.
நமது வார்டின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வார்டு மக்களின் நலம் காக்க பாடுபடுவேன் .அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகள் அமைக்க பாடுபடுவேன்.
இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொங்கல் மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் .
நமது வார்டில் உள்ள படித்த இளைஞர்கள் அரசு வேலை பெற்றிட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றிட இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த ஆவன செய்வேன். பிராட்டியூர் மற்றும் ஆலங்குளம் பகுதியில் அனைத்து நவீன வசதிகள் ஏற்படுத்தி சிறந்த பகுதியாக உருவாக்குவேன்.
நமது பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னாள் மற்றும் இந்நாள் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று நமது பகுதி மக்களின் ஒத்துழைப்போடு பாதுகாப்பை உறுதி செய்தேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu