அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி ஆசிரியர்களுக்கு பேச்சு போட்டி

அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி ஆசிரியர்களுக்கு பேச்சு போட்டி
X

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பயிற்சி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

தேசப்பற்றையும், ஆளுமைப் பண்பையும், திறன் மேம்பாட்டையும் வளா்க்கும் வகையில், திருச்சி அரசு அருங்காட்சியகம் பல்வேறு போட்டிகளையும், கண்காட்சிகளையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின திருநாளை முன்னிட்டு திருச்சி டவுன்ஹால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பயிற்சி ஆசிரியர்களுக்கு இந்திய ராணுவமும் முப்படைகளும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியை நடத்தியது. திருச்சி மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இருந்து பயிற்சி ஆசிரியர்கள் பலர் போட்டியில் பங்கேற்றார்கள்.

போட்டியில் பங்கேற்று சிறப்பாக பேசிய பயிற்சி ஆசிரியர்களை நடுவர்கள் மூலம் சிறந்த பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருச்சி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் தலைமை வகித்தார். டவுன்ஹால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தேவி நிர்மலா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Tags

Next Story
photoshop ai tool