திருச்சியில் போக்குவரத்து நெருக்கடி தீர்க்க "டிராபிக் மார்ஷல்" திட்டம்

திருச்சியில் போக்குவரத்து நெருக்கடி தீர்க்க  டிராபிக் மார்ஷல் திட்டம்
X
திருச்சியில் ‘டிராபிக் மார்ஷல்’ திட்டத்தை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினை தீர்க்க ‘டிராபிக் மார்ஷல்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி மாநகரில் விபத்து நடக்கும் இடங்களுக்கு உடனே சென்று முதலுதவி செய்யவும், போக்குவரத்து நெருக்கடி காணப்படும் இடங்களுக்கு உடனே சென்று போக்குவரத்தை சீர்செய்து பொதுமக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, திருச்சிமாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு "டிராபிக் மார்ஷல்" என்றழைக்கப்படும் இரண்டுசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

காவல்ஆணையர் கார்த்திகேயன், அந்த வாகனங்களை காவலர்களுக்கு வழங்கி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.அதன்படி, திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை,உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 6 போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு தலா ஒரு இரண்டுசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வாகனத்திற்கு இருவர் வீதம் ஒவ்வொரு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்திலும் போலீசார் பணியில் இருப்பார்கள். இந்த "டிராபிக்மார்ஷல்'" வாகனத்தில் முதலுதவி பெட்டி மற்றும்உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கும் வகையிலும், முதலுதவி செய்யும் வகையில் "டிராபிக்மார்ஷல்" வாகன பணியில் இருக்கும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் முதலுதவி செய்யும்பயிற்சி முடித்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கப்பட்டு விபத்துஏற்படும் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதலுதவிகளைமேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோல், போக்குவரத்து நெரிசல்ஏற்படும் செய்திகளை வாக்கி-டாக்கி மூலம் கண்காணித்து, அந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அந்த இடங்களில் போக்குவரத்தை சீர் செய்து பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவி செய்யும் வகையில் பணிபுரிவார்கள் என்று திருச்சி காவல் ஆணையர் தெரிவித்தார்.

Tags

Next Story