சத்திரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக கடைகளை அகற்ற மறுத்து வியாபாரிகள் போராட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தை மாற்றி புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது.
அப்போது பேருந்து நிலையத்திற்கு உள்ளே அமைந்திருந்த 54 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக அனுமதி அளித்தனர். அதன்படி பேருந்து நிலையத்திற்கு வெளியே கரூர் பைபாஸ் சாலை, சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் தற்காலிகமாக தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்திரம் பஸ்நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி சத்திரம் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 54 கடைகள் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பழைய கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன் பேரில் நேற்று அந்த கடைகளை அப்புறப்படுத்த ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபார சங்க செயலாளர் பரமசிவம் (வயது 80) என்பவர் தங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் கேட்டதற்கு, பத்து நாட்கள் தர முடியாது நீங்கள் வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி ஆணையரிடம் உடனடியாக சென்று மனு கொடுங்கள் என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்ததையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் சம்மந்தப்பட்ட 54 கடைகளும் ஏற்கனவே பழைய சத்திரம் பேருந்து நிலையம் உள்ளே அமைக்கப்பட்டிருந்த கடைகள். அவர்களுக்கு சத்திரம் பேருந்து நிலையம் கட்டி முடித்தவுடன் ஒதுக்கித் தருவதாக கூறி இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த 54 புதிய கடைகளையும் ஏலத்தில் பொதுவான வேறு நபர்கள் எடுத்துவிட்டதால் தங்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யவில்லை என குறை கூறுகிறார்கள். இது சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, வழக்கு நிலுவையில் இருப்பதாக கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனால் இன்று சத்திரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu