திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் நாளை மாலை அணிவிப்பு

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் நாளை மாலை அணிவிப்பு
X

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.

திருச்சி கோர்ட் அருகே அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் உருவசிலை உள்ளது. நாளை (24.12.2021) காலை 10.00 மணிக்கு எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.

அது சமயம் மாநில, மண்டல, மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள், அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணியினர் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!