திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி ரெயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் (பைல் படம்)

திருச்சிக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்தரெயில் திருச்சி ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது,ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பெட்டியின் கழிவறைக்கு அருகே 2 சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து பயணிகளிடம் விசாரித்தபோது, அந்த சாக்கு மூட்டைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. உடனே அவற்றை ரெயிலில் இருந்து கீழே இறக்கி சோதனை நடத்தினார்கள். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.அதன்மதிப்பு ரூ.88 ஆயிரம் இருக்கும்.

ரெயிலில்புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது உடனடியாகதெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு