/* */

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுத் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
X

திருச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திருச்சியில் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மாநிலத் தலைவராக முன்னாள் மாநிலப்பொருளாளர் அழகிரிசாமி, மாநிலப் பொதுச் செயலாளராக மோகனரங்கன்,மாநில பொருளாளராக நாமக்கல் மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர்களாக செந்தில்நாதன், மற்றும்மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குபேந்திரன் ஆகியோரும், மாநில தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் வடக்கு மண்டல செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்புச் செயலாளராக விருதுநகர் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன்,வடக்கு மண்டல செயலாளராக பண்ருட்டி வட்ட செயலாளர் பக்கிரிசாமி,

மத்திய மண்டல செயலாளராக முன்னாள் மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன், மேற்கு மண்டல செயலாளராக முன்னாள் மாநில துணைத்தலைவர் சுரேஷ், தெற்கு மண்டல செயலாளராக தென்காசி மாவட்ட செயலாளர் சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும்மாநில பிரச்சார செயலாளராக பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மாநில பொதுத்தேர்தலை புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டு தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் செய்து தேர்தல் இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், இந்த தேர்தலை நடத்திட முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறையினருக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வாக்களித்த மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தலை சிறப்பாக ஏற்பாடு செய்ய தங்களது பங்களிப்பைச் செய்த முன்னாள், இந்நாள், மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 17 Oct 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது