/* */

திருச்சியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

திருச்சியில் 50 ஆயிரம் பேர் எழுத உள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்
X

திருச்சியில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முன்னற்பாடுகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-2ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு வருகின்ற 21.05.2022 சனிக்கிழமை(முற்பகல்) நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி(மே), திருச்சிராப்பள்ளி(கி), ஸ்ரீரங்கம், இலால்குடி, முசிறி மற்றும் மணப்பாறை ஆகிய வட்டங்களில் 160 தேர்வு மையங்களில்; 50019 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென 160 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 50 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் ஒரு வருவாய் உதவியாளர் ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களில் திடீர்ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 15 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 192 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தோ;வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் கோவிட் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முன்னற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

Updated On: 19 May 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!